மிக நீண்ட வனாந்தரத்தை கடக்க வேண்டிய
பட்சியை ஒத்த
கட்டாயத்தில் நான் !
கண் முன்னே விரிவது பிறிதொரு வனாந்தரமாகவோ
அல்லது கனல் கனன்ற வனமாகவோ இருக்க கூடும்
அந்தி சாயும் பொழுதுகளில்
கால் பற்ற கொப்பற்ற
இறக்கை வலிக்கும் பயணமாக்கூட
அது பரிணமிக்க கூடும்
சூரியனின் தகிப்பை
நட்சத்திரங்கள் முளைத்த வெளிகளிலும்
உணர முடியும்
நேற்றைய கிளையின் கொப்பை
ஒத்த உபசரிப்பை
ராத்திரியின் சாயம் போகும் வரை
ரகசியம் பேசும் இலைகளை
பின்னதான ஒரு நாளில் மீண்டு சந்திப்பதும்
நெடுதுயில் கொள்ளும் தருணங்களும்...
புள்ளினங்கள் அற்ற ஆகாயத்தில் புள்ளியாய் மிதக்கும் போது
இறக்கை இன்னும் இலேசாகிறது,
மனசு கனக்கிறது
ஏழு மலை ஏழு கடல் தாண்டிய சாகசங்கள்...
நிறங்கள் நிரந்தரமற்று நிதர்சனங்களாய்
நீல கடலும் நெடுதூரம்
மரணத்தின் வலிகளுடன் உயிர் உருகிய தவங்கள்
வரங்கள்
ஏதுமற்ற ஒன்றிற்காய்
உணர்வுகள் உச்சுக்கொட்டுகின்றன...
ஆனாலும் பட்சியை ஒத்த
கட்டாயத்தில் நான் !
கண் முன்னே விரிவது பிறிதொரு வனாந்தரமாகவோ
அல்லது கனல் கனன்ற வனமாகவோ இருக்க கூடும்
அந்தி சாயும் பொழுதுகளில்
கால் பற்ற கொப்பற்ற
இறக்கை வலிக்கும் பயணமாக்கூட
அது பரிணமிக்க கூடும்
சூரியனின் தகிப்பை
நட்சத்திரங்கள் முளைத்த வெளிகளிலும்
உணர முடியும்
நேற்றைய கிளையின் கொப்பை
ஒத்த உபசரிப்பை
ராத்திரியின் சாயம் போகும் வரை
ரகசியம் பேசும் இலைகளை
பின்னதான ஒரு நாளில் மீண்டு சந்திப்பதும்
நெடுதுயில் கொள்ளும் தருணங்களும்...
புள்ளினங்கள் அற்ற ஆகாயத்தில் புள்ளியாய் மிதக்கும் போது
இறக்கை இன்னும் இலேசாகிறது,
மனசு கனக்கிறது
ஏழு மலை ஏழு கடல் தாண்டிய சாகசங்கள்...
நிறங்கள் நிரந்தரமற்று நிதர்சனங்களாய்
நீல கடலும் நெடுதூரம்
மரணத்தின் வலிகளுடன் உயிர் உருகிய தவங்கள்
வரங்கள்
ஏதுமற்ற ஒன்றிற்காய்
உணர்வுகள் உச்சுக்கொட்டுகின்றன...
எனக்கான ஆகாயம்
இன்னும் திறந்தே இருக்கிறது !
27 comments:
//ஏதுமற்ற ஒன்றிற்காய்
உணர்வுகள் உச்சுக்கொட்டுகின்றன...//
அருமையான வரிகள்...
உணர்வுகளை தட்டியெழுப்பும் வரிகள்.
@ ப்ரியமுடன்...வசந்த்...
நன்றி வசந்த்!
@ உலவு.காம்...
நன்றி!
@ அக்பர்...
உண்மையாகவா? அந்தளவுக்கு இருக்கும் என்று நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை! நன்றி அக்பர்!
ம் ....
@ நண்டு @நொரண்டு!
ம்ம்ம்ம்....
ராத்திரியின் சாயம் போகும் வரை
ரகசியம் பேசும் இலைகளை..
இந்த வார்த்தைகள் தான் கவிதையின் உணர்வுகளை வெளிப்படுத்டும் உறுதியான வார்த்தைகளாக எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் அணிகளைக் கையாண்டு உங்களின் தனிமையின் நிழல் தாங்கிய கவிதையை நகர்த்திச் செல்கிறீர்கள். கவிதை பரந்து விரிந்திருக்கும் ஆகாயம் போல இருந்தாலும் உங்கள் மனதின் ஆதாரபூர்வமான உணர்வாகவே தோன்றுகிறது. அருமையான கவிநயம் சிந்தும், கவிதை.
முதலில் படிக்கையில் புரியா விட்டாலும், அடுத்த தரம் படிக்கையில் நிறைய விடயங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் புலப்படுத்துகிறது.
@ தமிழ் மதுரம் !
நன்றி. உண்மையை சொல்லப்போனால் தனிமையின் ஸ்பரிசத்தை, அது தரும் கிறக்க நிலையை, ஒரு தெரு நாயைப் போன்ற கட்டற்ற எண்ண-படிமங்களை அதன் போக்கிலேயே பதிவு செய்யப்பார்க்கிறேன்.
நன்றி, வரவுக்கும் பகிர்தலுக்கும்!
அற்புதம்.. நீங்கள் நிறைய எழுத வேண்டும்..
மூன்று தடவை படித்தபின்னும் இன்னும் சில 'புரியாததுகள்' மனதில் மண்டிக் கிடக்கின்றன. மீண்டும் மீண்டும் அந்த புரிதலுக்காய் படிக்க ஆவல். தமிழிலிருந்து தூரம் வந்து விட்டேனோ என ஒரு எண்ணம். எதுவாயினும், உங்கள் எழுத்துக்களும் அதனுள் விரியும் உலகமும் அழகு. நன்றி, பகிர்தலுக்கு.
பிரசன்னா
நன்றி, நிச்சயமாக... உங்களிடமிருந்தும் நிறைய குட்டியூண்டு கதைகளை எதிர்பார்க்கிறேன்.[பரிணாமம் அற்புதம்]
@ அன்னு...
என்ன சொல்றது எண்டு தெரியல்ல...நன்றி வரவுக்கும் பகிர்வுக்கும்!
நன்றாக இருக்கிறது துரோகி :)
நல்லாயிருக்குங்க.. துரோகி க்கு பதில் வேறு பெயர் தேடலாமே..
@ Sivaji Sankar!
நன்றி! :P
@ அஹமது இர்ஷாத்!
நன்றி! அது நல்லா இருக்குதே...!
பல கவிதைகளுக்கான ஆகாயம் உங்களிடம் விரிந்தே கிடக்கிறது.. என்பதைச் சொல்லாமல் சொல்கிறது..
மாதம் இரண்டுன்னு எண்ணி பதிவு போடற மாதிரி தெரியுதே! வரிசையா கவிதைகள்! தொடர்ந்து சொந்த சரக்கை இறைக்கும் உங்களை பாராட்டுகிறேன்.
word verification எடுத்திருங்க!கமெண்ட் போடறவங்களுக்கு கஷ்டம்
@ ரிஷபன்! ஆஹா......நன்றி! நன்றி!
@Software Engineer...
company ரகசியத்த சரியா கண்டு பிடிச்சிடீங்களே!
பதிவு போட சோம்பலில் தான்! நன்றி! நன்றி!
ஆ... word verification-அ எடுத்தாச்சு!
அருமையான கவிநயம் சிந்தும்
...கவிதை
படங்கள் எப்படி தேர்வு செய்யறிங்க? காப்பி ரைட் பிரச்சனை எதுவும் இல்லையா?
@ velkannan,
நன்றி! நன்றி!
@ Jayaprakashvel,
Google-ல தான், இத பற்றி யோசிக்கவே இல்ல.......இனி copy right free படங்களா பாத்து போடுறன்!
Post a Comment