என்ன, சூரியன் மரித்த பாதைகளிலேயே
நடந்து கொண்டிருக்கிறேன்
வாழ்ந்து கெட்ட இனத்தின் வார்த்தைகளின் வலி....
மரிக்கும் தருணம் குறித்த எதிர்பார்ப்புகள்....
விடியலை குறித்த பெருவிருப்புடன்
விடியாமலே போன இரவுகள்
இன்னும்,
நினைக்க விரும்பாத நினைவுகள்
கண்கள் மூடிய காலங்கள்
ஏராளம்!
சக மனிதன் மீதான நம்பிக்கை என்பது
நூற்றாண்டு தொலைவில்!
"எப்படியெல்லாம் ஏன்?"
வன்மம் மனசு முழுக்க....
வெறுத்து போகும் உயிரோடிருத்தலின் ஈர்ப்பு....
எத்தனை முறை செத்துப்போவது?
தெரு நாயின் ஓலம்
மனசுக்கு என்னமோ செய்கிறது
நாடி நாளம் எல்லாம் படர்ந்து,
முதுகுத்தண்டை ஊடறுத்து ,
நெற்றிப்பொட்டில் அடித்து....
உன்மத்தம்!
புறக்கணிப்புகள்....
ஏமாற்றங்கள்....
ஏக்கங்கள்....
மீண்டும்
எதிர்பார்ப்புக்கள் - ஏதாவது ஒன்றிற்காய்!
என்ன செய்வது,
நானொரு இயலாதவன்
சூரியன் மரித்த பாதைகளிலேயே
நடந்து கொண்டிருக்கிறேன்...

5 comments:
சிறப்பு.
நன்றி King Viswa!
வார்த்தைகளின் வலி கவிதையில் புரிகிறது. மனதின் வலி, காலம் காட்டுமோ?
முடியாதது தான், வேறு என்ன செய்து விட முடியும் இப்படி எழுதி தீர்ப்பதை தவிர?
நன்றி அன்னு
வலிகள் தீர்ந்து கவிதையில் உள்ள ஜீவன் வாழ்விலும் மலரட்டும்
Post a Comment