Tuesday, April 6, 2010

" செத்து விட தோன்றுகின்ற தருணங்களும் நானும் "

மனசுக்கு வால் முளைத்து கொப்பு தாவும்
பூகோளத்தின் மூலையில் தனியாய் நின்று பழகும்
Aprocalipto, Avatar என்று காட்சி மாறும்
ஏன் என்று தெரியாத கேள்வி
ஏகாந்தம் பூசிக்கொண்ட வானம்
கண்ணை மூடி காட்சி மறக்கையில்
கற்பனையில் வந்து போகும் கரும்புள்ளி

போகுமிடமெல்லாம் பூத்து கிடக்கிறது - அரைகுறையாய் விளங்கும்
அந்நிய மொழி சம்பாஷனைகள்
கணன்று வரும் கோபமும்....
யதார்த்ததின் மீதான பிடிப்புகளும்....

தனியான பயணங்களை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது மனசு
எப்போதோ கேட்ட பாடல் மீதான ஈர்ப்பு
இப்பொழுதும் விளங்காத இருண்மை
என்னவென்று தெரியாத தருணங்களில்
எதுமே செய்யாது இருக்கிறது உள்ளுணர்வு
"இது இப்படித்தான்"
இன்னும் எத்தனை நாள்களுக்கு?
ஏதேதோ....
கனவை கடந்து போகும் கற்பனைகள்

தூக்கம் மறந்த இரவுகள்....
சூன்யத்தில் இருப்பை தக்க வைப்பதற்கான போராட்டங்கள்....
இன்னும் தொடர்கின்றன
புரிதலும்....
தெரிதலும்....

மையப்புள்ளியில் மனசு நிற்கிறது
கண்கள் மட்டும் காட்சி திரைக்கு அப்பால்!
அவமானப்பட்ட தருணங்கள் அப்படியே ஆழ்மனதில் நிற்கிறது!
மொழிகளின் ஆளுமையை இழந்து விட்ட பிறகு....
ஒற்றை பெருமூச்சு!
இயலாமையின் வீச்சு!
எங்கோ தொலைவில் ஒற்றை காகம் கரைகிறது.

4 comments:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

துரோகி said...

சரி,இணைத்தாயிற்று! வருகைக்கு நன்றி!

துரோகி said...

தமிழிஷ்ல vote போட்ட நண்பர்களுக்கு எனது நன்றிகள்! பிரபல இடுகைக்குக்கூட வந்திட்டுது எண்டா பாத்து கொள்ளுங்களன்! :P

ரிஷபன் said...

வார்த்தைகள்.. வலிகள்.. சில நேரங்களில் நாமும் செய்வதறியாமல்..

Post a Comment

கடந்து போனவர்கள்

free counter

நான்....

My photo
Colombo, Sri Lanka
மனசுக்குள் ஒரு சாத்தான் அது மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்க துடிக்கிறது.... நடிக்கிறது! அந்த காட்சி குழப்பத்தில் மனசும் கொஞ்சம்தான் கிறங்கி போகிறது! இன்றோ, நாளையோ... நான் ஒரு துரோகி! அல்லது நேற்றாகக்கூட இருந்திருக்கலாம்!

கூடவே வருபவர்கள்