யாருமில்லாத சூன்யத்தில்
தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது
பாழடைந்த வீடு!
எழுத உட்காந்து கண் மூடி யோசித்து
முனிவனாகும் போதெல்லாம் வரமறுக்கிறது
கவிதை
மூன்றாவது வாரமாய் பார்க்கிறேன்
இன்றும் காணவில்லை
bus stand பிச்சைகாரனை
சாலையோர சுவரில் யாரோ ஒருவன் சிரிக்கிறான்
கறுப்பு வெள்ளையில்
- மரண அறிவித்தல்
எப்பொழுதெல்லாம் எழுத நினைக்கிறேனோ
அப்பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது
அவமானப்பட்ட தருணங்கள்!
10 SEC READ The gift of insults
3 years ago